பிறப்பு தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் 1,000 வெள்ளி அபராதம் விதிக்க உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஏழை மக்களுக்கு பெரும் சுமையாகி விடும் என்று நேற்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் உள்துறை அமைச்சின் இந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர்.
இந்த அளவுக்கு அதிகமான அபராதம் விதிப்பது ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதோடு இந்நடவடிக்கை நாடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாரம் செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக 50 வெள்ளியாக இருந்த அபராதத் தொகை திடீரென்று அதிகரிக்கப்பட்டு அமலுக்கு வருகிறது. 1952 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் சுவீகாரச் சட்டத்திற்கான திருத்தமானது, அனைத்து பிறப்புகளும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியும்கூட. இதில் முறை தவறிப் பிறந்த குழந்தைகளும் அடங்கும். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் இந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த அபராத அதிகரிப்பு முடிவைச் செய்தது என்று துணை உள்துறை அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.
Read More: Malaysia Nanban News Paper on 13.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்