தனியார் புலன் விசாரணையாளர் பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி ஏ.செந்தமிழ்ச்செல்வி தொடுத்துள்ள வழக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், மேலும் இதர எழுவரும் இன்னும் 14 நாட்களில் தங்கள் தற்காப்பு வாதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இவ்வழக்கை ரத்துச் செய்யக் கோரும் தங்களின் விண்ணப்பம் நிலுவையில் இருக்கும் நிலையில், தாங்கள் தற்காப்பு வாதம் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்ற அவர்களின் விண்ணப் பத்தை நீதிபதி ஹியூ சியூ கெங் நிராகரித்ததை தொடர்ந்து உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதாக செந்த மிழ்ச்செல்வி சார்பாக ஆஜராகியுள்ள தலைமை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் கூறினார்.பிரதிவாதிகள் அனைவரும் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி யன்று அல்லது அதற்குள் தங்கள் தற்காப்பு வாதத்தை சமர்ப்பித்தாக வேண்டும்.
தங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு பிரதிவாதிகள் எந்தவித சிறப்புச் சூழ்நிலைகளையும் வெளிப்படுத்தவில்லை என்று நீதிபதி கருத்து தெரிவித்ததாக கோபால் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban News Paper on 12.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்