மலேசிய வரலாற்றில் சீக்கியர் ஒருவர் முதல் முறையாக போலீஸ் படையின் மிக உயர்பதவியான புக்கிட் அமான் போலீஸ் தலைமையக வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநராக ( சி.சி.ஐ.டி. டைரக்டர்) நியமிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்ட
17 மாதங்களிலேயே டத்தோ அமார் சிங், அந்த உயர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். போலீஸ் படையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பில் 59 வயதான அமார் சிங் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நடக்கும் பலதரப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பது, முறியடிப்பது போன்ற போலீஸ் படையின் முதன்மையான இலாகாவாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுப்பிரிவு அமைகிறது. போலீஸ் படையில் மிக நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது வழக்கமான நடைமுறையாகும்.
வரும் சனிக்கிழமை டத்தோ அமார் சிங், அந்த புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். அமார் சிங், கோலாலம்பூர் போலீஸ் தலைவராக இருக்கும் இவ்வேளையில் அவர் ஆகக்கடைசியாக கையாண்ட மிகப்பெரிய குற்றச்செயல் சம்பவம், கோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சமயப்பள்ளி தீ வைக்கப்பட்ட சம்பவமாகும். அதில் 23 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர். அது ஒரு விபத்து என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அது தீவைக்கப்பட்ட சம்பவம் என்று துரிதமாக கண்டுபிடித்து 11 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய எழுவரை கைது செய்த பெருமை அமார் சிங்கையே சேரும்.
Read More: Malaysia Nanban News Paper on 12.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்