ஷங்ரிலா ஹோட்டல் குழுமத் தைச் சேர்ந்த கோல்டன் சென்ஸ் ரிசோர்ட் ஓய்வு விடுதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் கோலத்தை வரைந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.சுமார் 120,000 கேலன் தண்ணீர் நிறைந்த அவ்வோய்வு விடுதியின் நீச்சல் குளத்தில் இந்த் கோலம் மிதக்கின்றது. கண்களை பறிக்கும் அழகிய காட்சியாக இது வருகையாளர்கள், குறிப்பாக சுற்றுப்பயணி களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இளஞ்சிவப்பு, நிலம், ஊதா, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் நிறங் களில் அழகாக வரையப்பட்டுள்ள மயில், தாமரை இலைகளுடன், ஷங்ரிலா ஹோட்டலின் முதல் எழுத்தான ‘எஸ்’ சின்னம் கொண்ட 638.02 சதுர மீட்டர் அளவிலான இந்த கோலம் மலேசியாவில் இதுவே முதல் வகையாகும்.மொத்தம் 435 கிலோ கிராம் எடையைக் கொண்ட உலர்ந்த தேங்காய்ப்பூ (87 பைகள்), 37.9 கிலோ கிராம் எடையைக் கொண்ட ஸ்டிக்கர் பசை, 47 பல்வேறு வடிவம், அளவிலான ஸ்டாய்ரோஃபோம், 5,000 கொத்து சாமந்தி பூ வகைகள் ஆகியன இதன் உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.
Read More: Malysia Nanban News Paper on 11.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்