கெட்கோ நில வழக்கில் முந்தைய தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்ட போதிலும் அந்த நில விவகாரத்தில் எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அந்த நிலம் 468 குடும்பங்களின் சொத்து, அந்த நிலம் எங்களிடமிருந்து வஞ்சகமான முறையில் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு நீதி தேவதை நிச்சயம் கண்களை திறப்பாள் என்று கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் நேற்று நம்பிக்கை தெரிவித்தனர்.
தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் பெற்ற முந்தைய தீர்ப்பை நேற்று புத்ராஜெயாவில் அப்பீல் நீதிமன்றம் நிலைநிறுத்திய போதிலும் அந்த தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதியின் கதவுகள் எங்களுக்கு அடைக்கப்பட்டு விட்டதாக நாங்கள் கருதவில்லை.
நாங்கள் வெற்றி பெறுவதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாகவே நம்புகிறோம். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தாமரை ஹோல்டிங்ஸ் நிறு வனத்தின் இயக்குநர்களான டத்தோ ரெனா. இராமலிங்கம் (வயது 54), அவரின் சகோதரர் டத்தோ ரெனா. துரைசாமி ( வயது 58) ஆகியோரை கைது செய்து ஆறு நாட்கள் தடுத்து விசாரணை செய்ததன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்