தன் தம்பியை வெட்டிக்கொன்றப்பின்னர் அவரின் மனைவியையும் காயப்படுத்திவிட்டு யாரோ கொலை செய்து விட்டதாக நாடகமாடிய கோத்தா ராஜாவை சேர்ந்த எம். நாகேஷ்வரன் (வயது 41) என்ற இளைஞருக்கு நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
சொத்துத் தகராறினால் பேராசைக்கொண்ட அந்த நபர், உடன் பிறந்த தம்பி என்றுகூட பாராமல் ஈவுயிரக்கமின்றி கொன்றதாக சாட்சியங்கள் வழி தெரியவந்ததன் மூலம் நாகேஸ்வரனுக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஒரே தண்டனைதான் உண்டு. அதுதான் தூக்குத் தண்டனை என்று உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ சுல்கிப்லி பாக்கார் தீர்ப்பளித்தார்.
கடந்த 2015 மே 5 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஷா ஆலம், செக்ஷன் 36, ஜாலான் கம்போங் ஜாவா வீடமைப்புப்பகுதியில் எம். குணாளன் (வயது 37) என்பவரை வெட்டிக் கொன்றதுடன் அவரின் மனைவி வி. மல்லிகாவிற்கு காயம் விளைவித்ததாக குளிர்சாதனப் பெட்டிகளை பழுதுபார்ப்பவரான நாகேஷ்வரன் குற்றஞ்சாட்டப்பட்டார். 35 வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட தன் தம்பி குணாளனை யாரோ வெட்டிக்கொன்று விட்டதாக தொடக்கத்தில் நாகேஸ்வரன் நாடகமாடியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்