கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்த இரு பிள்ளைகள், படுக்கையில் உயிரற்ற உடலாய் தாயார், தூக்கில் தொங்கிய தந்தை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரின் கொடூரமான மரணம் ஜொகூர் முத்தியாரா ரினி குடி யிருப்புப் பகுதி வாழ் மக்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இங்குள்ள ஓர் ஆடம்பர குடியிருப்புப் பகுதியான முத்தியாரா ரீனி, ரீனி ரெசிடன்ஸ், ஜாலான் உத்தாமா 41-இல் உள்ள தங்கள் வீட்டில் நேற்று அந்த நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. இவர்களின் மரணத்திற்கு பின்னணி கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நேற்று, பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் எல்.பூபாலன் ரத்னம் (52) தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் தூக்கில் தொங்க காணப்பட்டார். அவரின் மனைவி பி.ஜெயா பிச்சைமுத்து (46) வீட்டின் வரவேற்பறைக்கு அருகில் உள்ள கட்டிலில் இறந்து கிடந்தார். அதே சமயம், அவர்களின் 9 வயது மகள் கிருஷ்ணா பிரத்தீனா, 14 வயது மகன் ஷர்வீன் ஆகிய இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு மேல் மாடியில் உள்ள சாமி அறையில் இறந்து கிடந்தனர் என்று இஸ்கந்தார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் நூர் ஹஷிம் முகமட் தெரிவித்தார்.
மரணமடைந்த பூபாலன் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்களின் மரணத்தை அண்டை வீட்டார் அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் விவரித்தார்.
Read More: Nanban News Paper on 7.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்