சிரம்பான் பெரிய மார்க்கெட் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வியாபாரிகளுக்கு நெகிரி மாநில மஇகா தொடர்புக்குழு ஒரு சல்லிக் காசுகூட கொடுத்து உதவ முன் வராதது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது.கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் சிரம்பான் பெரிய மார்க்கெட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இந்திய வர்த்தகர்கள் உட்பட 300 பேரின் கடைகள் தீக்கிரையாகின.
இந்தத் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக அதிரடியாக மாநில ஜசெக இரு வாரங்களில் வெ.3 லட்சம் நிதி திரட்டி ஒரு வர்த்தகருக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கியது. அதன் பிறகு மாநில மசீச கட்சி ஜசெகவுக்கு போட்டியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கியது.
ஆனால் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வர்த்தகர்களுக்கு நிதி உதவி செய்வதற்கு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எல்.மாணிக்கம் இன்னும் மன இறுக்கமுடன் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திடம் தகவல் கொடுத்தும் எந்தவித பயனும் ஏற்படவில்லை.
Read More: Malaysia Nanban News Paper on 6.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்