சுபாங் விமான நிலையத்திற்கு செல்லும் பாதையை ஒட்டிய மூன்று கடைகளும் இரண்டு வீடுகளும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரே பதற்றமும் பரபரப்பும் நிலவியது. வீடுகள் உடைப்பை எதிர்த்து பொங்கி எழுந்து, அதனை தடுக்க முற்பட்ட பொது மக்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வீடு உடைப்பினால் 17 பேர் உறைவிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் உதவியுடன் சிலாங்கூர் நில இலாகா அதிகாரிகள் நேற்று காலையில் இந்த வீடு உடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த வீடுகளும் கடைகளும் இருக்கும் இடம் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறிக்கொண்ட சிலாங்கூர் நில இலாகா, ஷா ஆலம் மாநகர் மன்றம், தெனாகா நேஷனல், ஷபாஸ் மற்றும் காவல் துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்ற பின்னரே குடியிருப்புக்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினர். வீடுகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்த முற்பட்ட மக்களில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் அ.சிவராஜன், இளைஞர் பகுதித் தலைவர் சுவீட் இஸ்மாத் ஆகியோரும் அடங்குவர். ஒன்பது பேரை விசாரிக்கும் வண்ணம் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Read More: Malaysia Nanban News paper on 5.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்