ஏழை எளிய மக்கள், மாண வர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை சுருட்டி தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்ட ஓர் அமைச் சின் மூத்த அதிகாரிகளை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) வலைவீசி தேடி வருகிறது.
அந்த ஏழை மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய 10 தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து சுமார் 10 கோடி வெள்ளியை அவர்கள் தங்கள் பாக்கெட்டிற்குள் திணித்துக் கொண்ட அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த திட்டங்கள் அனைத்துமே ஏழைகளுக்கு உதவுவதற்காக வரையப்பட்டவை. அவற்றின் மதிப்பு வெ.50 கோடி முதல் வெ.100 கோடி வரைக்குமாகும். அதிலிருந்து மிகப்பெரிய அளவில் பணம் வெளியாகியுள்ளது என்று எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அணுக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்த தாக தெ நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் கூறுகிறது.
இந்த அநீதிக்கு காரணமானவர்களை கடந்த ஆண்டு முதலாக எம்.ஏ.சி.சி. கண்காணித்து வருகிறது. எந்த ஒரு தடயத்தையும் விட்டுச்செல்லாமல் மிகவும் கவனமாக அவர்கள் செயல்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகளையும் நிறுவன இயக்குநர்களையும் கைது செய்வதற்கு எம்.ஏ.சி.சி. போது மான ஆதாரத்தை கண்டுபிடிக்கவில்லை என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
Read More: Malaysia Nanban New Paper on 5.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்