நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் ம.இ.கா. சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அம்னோ தேர்வுசெய்யும் அளவிற்கு அதன் கைப்பா வையாக மஇகா மாறிவிடுமோ என்ற அச்சம் மூத்தத் தலைவர்கள் மத்தியில் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
71 வயது நிரம்பிய மூத்த அரசியல் கட்சிகளில் ஒன்றாக இந்நாட்டு இந்தியர்களை பிரதிநிதித்து வரும் மஇகா, கடந்த காலங்களைப் போல் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தனது வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதா? என்பது அண்மைய காலமாக நடந்து வரும் சில சம்பவங்கள் அத்தகைய அச்சத்தை ஏற்படுத்துவதாக மூத்தத் தலைவர்கள் கூறுகின்றனர்.
அம்னோவின் ஆதரவு இருந்தால் போதும், தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்குரிய வாய்ப்பு தானாக கிட்டிவிடும் என்ற நோக்கில் அம்னோ தொகுதித் தலைவர்களின் ஆதரவை பெறுவதிலும் அவர்களுக்கு மானியங்களை வாரிக்கொடுப்பதிலும் சில மஇகா தலைவர்கள் காட்டி வரும் அக்க றையும் ஆர்வ மும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அந்த மூத்த தலைவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
இந்திய சமுதாயத்திற்கு பகிரப்பட வேண்டிய மானியங்கள், அம்னோ தலைவர்களுக்கு செலவிடுவதிலும் அவர்களின் ஆசியை பெறுவதிலும் சில தலைவர்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். மஇகா சார்பில் இந்த வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற ஒரு தவ றான மாயையை தற்போது தொகுதி அம்னோ மாநாட்டில் தீர்மானம் வழி ஏற்படுத்தப்படுகிறது.
Read More: Malyasia Nanabn News Paper on 4.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்