எதிர்க்கட்சிகளின் நன் கொடையாளர்கள் மீது அரசாங்கம் நெருக்குதல் கொடுத்து வருவதால் அக்கட்சிகளால் தங்களுடைய நடவடிக்கைகளுக்கு போதிய அளவு நிதிகள் திரட்ட இயலவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய கட்சிகளுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருந்தபோதிலும், வரும் பொதுத் தேர்தலுக்கு பெரும் பணம் தேவைப்படும் என்று முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவருமான டாக்டர் மகாதீர் தமது வலைப்பதிவில் நேற்று குறிப்பிட்டார். சுவரொட்டிகள், பதாகைகள், பொதுக் கூட்டங்கள், பயணம், பிரச்சாரம், கொடிகள், இன்னும் இதர உபகரணங்களுக்கு பணம் தேவை என்று அவர் தெரிவித் தார்.
பிரச்சாரங்களையும், சுவரொட்டிகளையும் குறைத்தோமானால், எதிர்க்கட்சியினரின் போராட்டங்களைப் பற்றி தகவல்கள் வாக்காளர்களை சென்றடை யாது. அதேவேளையில் அரசாங்கத் தரப்பு கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஆக்ககரமான முறையில் மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாமல் போய்விடும் என்றார் அவர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் போலீஸ், உள்நாட்டு வருமான வரி வாரியம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அரசாங்க அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி நன்கொடையாளர் களை பிழிந்து எடுத்து வருகிறார் என்ற தமது குற்றச்சாட்டை டாக்டர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார்.
உள்நாட்டு வருமான வரி அதிகாரிகள் நன்கொடையாளர்களின் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை நடத்தி கூடுதல் வரி கோருவதாக அவர் தெரி வித்தார். அவர்கள் மறுத்தால், அவர்களுடைய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன், கணக்குகள் முடக்கப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். தொழிலும் முடங்கிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்