மலேசியாவில் உள்ள வங்கிகள் சங்கத்தின் புதிய நிர்வாக இயக்குநராக கல்பனா சாம்பசிவமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் நியமனம் கடந்த செப்டம்பர் (2017) 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அச்சங்கம் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.
ஒரு வழக்கறிஞராக பயிற்சிப் பெற்றுள்ள கல்பனா, சுமார் பத்தாண்டு காலம் சட்டத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். பிறகு, நிறுவன துறையில் காலடி பதித்தார். டி.ஆர்.பி.- ஹைக் கோம் பெர்ஹாட் நிறுவனத்தில் முதல் முறையாக இவர் சட்ட விவகாரங்கள் பிரிவின் தலைவராகப் பொறுப் பேற்றார். பிறகு, எக்ஸி யாட்டா குரூப் பெர் ஹாட்டில் மூத்த ஆலோ சகராக நியமனம் செய்யப் பட்டார்.
மிகவும் சிக்கலான நிறுவன இணைப்பு, கையகப்படுத்துவது, கடன், பங்குச் சந்தை பரிவர்த் தனைகள், வங்கி விவகாரங்கள் உட்பட, பவ்வேறு விஷயங்கள் குறித்து சட்ட ஆலோசனைகள் வழங்குவதில் வல் லமை வாய்ந்தவர்.மேற்கு இங் கிலாந்து, பிரிஸ்ட் டல் பல்கலைக்கழக பட்டதாரியான இவர் நொட்டிங்ஹெம் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக உறவுகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 2.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்