கெட்கோ நில விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் விசாரணைக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தாங்கள் தயார் என இப்பிரச்சினை தொடர்பாக கடந்த வாரம் எம்.ஏ. சி.சி.யினால் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர்களான ரெனா சகோ தரர்கள் நேற்று தெரி வித்தனர். நேற்று காலை 9.30 மணிக்கு எம்.ஏ.சி.சி. தடுப்புக் காவலில் இருந்து அவ்விரு சகோதரர்களான ரெனா. ராமலிங்கம், ரெனா.துரைசிங்கம் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது: கெட்கோ நில விவகாரம் தொடர்பில் எம்.ஏ.சி.சி. விசாரணைக்காக எங்களை தடுத்து வைத்தது. அவ்விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் அனைத்து கேள்விகளுக்கும் சரியான வழியில் விளக்கங்களை தந்தோம்.
எம்.ஏ.சி.சி.யின் விசாரணை மிகவும் நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் நடந்தது. கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், திங்கட்கிழமை வரை எங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்புக்காவல் காலவரையை குறைத்து, நாங்கள் கொடுத்த வாக்கு மூலம் மன நிறைவு அளித்ததால் நேற்று காலை விடுவிக்கப்பட்டோம்.
Read More: MALYSIA NANBAN NEWSPAPER on 2.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்