வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் வேட்பாளராக தேர்வு செய்யப்படவிருக்கும் ம.இ.கா. வேட்பாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) கழுகுப் பார்வையில் சிக்காமல் இருந்தால் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்படுவது உறுதியாகும்.
பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை தாங்கள் பரிசீலனை செய்யவிருப்பதாக எம்.ஏ.சி.சி அண்மையில் அறிவித்திருந்தது. தேசிய முன்னணி இதற்கு ஒப்புக் கொண்டுள்ள நிலையில் ம.இ.கா.வும் அவ்வாறே அதன் பட்டியலை எம்.ஏ.சி.சி.யின் பார்வைக்கு சமர்ப்பிக்கும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.
தங்களின் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் ம.இ.கா வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள டாக்டர் சுப்பிரமணியம், இப்பட்டியலை பிரதமர் அங்கீகரித்த பிறகு அது பரிசீலனைக்காக எம்.ஏ.சி.சி-யிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ம.இ.கா. போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்களை ம.இ.கா. முன்மொழிந்துள்ளது. யார் சரியான வேட்பாளர் என்பதை பிரதமர் தேர்வு செய்வார். இளைய வாக்காளர்களை கவரும் வகையில் அதிகமான புதிய வேட்பாளர்களை பட்டியலில் இணைத்தி ருப்பதாக டாக்டர் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார்.
Read more: MALAYSIA NANBAN NEWSPAPER on 2.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்