மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தான் செய்து கொண்டிருந்த விண்ணப்பத்தை நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுக் கொண்ட பிகேஆரின் பத்து நாடாளு மன்ற உறுப்பினர் தியான் சுவா ஒரு மாத காலத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
2012இல் நடைபெற்ற பெர்சே 2 பேரணியைத் தொடர்ந்து, போலீஸ் பயிற்சி மையம் (புலாபோல்) அமைந்துள்ள பகுதியை விட்டு வெளியேற போலீசார் விடுத்த உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்த குற்றம் தொடர்பிலானது இந்த தண்டனை. புலாபோல் ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாகும். செஷன்ஸ் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஒரு மாத கால சிறைத் தண்டனையையும் 1,000 வெள்ளி அபராதத்தையும் நிலை நிறுத்துவது என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆட்சேபித்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.
பிகேஆர் உதவித் தலைவரு மான தியான் சுவா, நேற்று நீதி மன்றத்தின் கைதி கூண்டில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு முன்னர் தனது மேல் முறையீட்ட வாபஸ் பெற்றார். மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொக்தாருடின் பாக்கி தலைமையிலான குழு, தியான் சுவாவின் வாபஸ் முடிலை ஏற்றுக் கொண்டதுடன், சட்டத்தின் கீழ் இது அவரது உரிமை என்றும் கூறியது.
சிறிது நேரத்திற்குப் பின்னர், இக்குழு ஏகமனதான தண்ட னையை உறுதிப்படுத்தியது. இக்குழுவில் நீதிபதிகள் ஸக்கரியா சேம், அப்துல் கரிம் அப்துல் ஜாலில் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். 2012 ஏப்ரல் 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட்ட தியான் சுவாவையும் இதர பெர்சே 3, பேரணி பங்கேற்பாளர்களையும் மறுநாள் 29ஆம் தேதி அதிகாலையில் புலா போலை விட்டு வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டனர்.
Read More: Malaysia Nanban News Paper on 30.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்