மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய உயர் நெறி, நிர்வாக கண்காணிப்பு இலாகாவை உருவாக்க பரிந்துரை செய்துள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோ பால் லோவை எம்ஏசிசியின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஸூல்கிப்ளி அகமட் நேற்று கடுமையாக சாடினார்.
எஸ்பிஆர்எம் தனது தளவாடங்களையும் ஆள்பலத்தையும் அதிகரித்துக் கொள்ளவும் அதன் ஊழியர்களின் நலனை பேணவும் அந்த ஆணையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர புதிய ஏஜென்சியை அமைப்பது பற்றி அல்ல என்று ஸுல்கிப்ளி தெரிவித்தார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் லஞ்ச, ஊழல் விவகாரங்களை விசாரிப்பதற்கும் ஆக்கப்பூர்வமான முறையில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வருவதற்கும் அதனை கண்காணிக்க தேசிய உயர்நெறி நிர்வாக கண்காணிப்பு இலாகா ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் லோ கூறியிருப்பதை ஸுல்கிப்ளி கடுமையாக சாடினார்.
இந்த அமைச்சர் யார்? எங்களின் விசாரணைகளை கட்டுப்படுத்துவதற்கு இவர் யார்?" என்று ஸுல்கிப்ளி சம்பந்தப்பட்ட அமைச்சரவையில் வெளுத்து வாங்கினார். நாங்கள் எப்போதுமே சுந்திரமாக செயல்பட விரும்புகிறோம். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை கண்காணிப்பதற்காகத்தான் இந்த உயர்நெறி இலாகா அமைக்கப்படுகிறது என்று காரணம் கூறப்படுமானால் எங்களின் வழக்குகளை அவர்களிடம் எதற்காக நாங்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அனைத்து இலாகாக்கள் மற்றும் ஏஜென்சிகளின் நிதி ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு வரும் வேளையில் இப்படியோரு புதிய ஏஜென்சியை அமைப்ப தற்கான அவசரமும் அவசியமும் ஏன் ஏற்பட்டது என்று ஸுல்கிப்ளி கேள்வி எழுப்பினார். இந்த உயர்நெறி இலாகாவை அமைப்பதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது என்று அவர் வினவினார்.
Read More: Malaysia Nanban News Paper on 30.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்