1 எம்.டி.பி. விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று தொடுக்கப்பட்ட வழக்கு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி ஒரு மனுவை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரும், இதர இரண்டு தரப் பினரும் சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட் டது. பிரதமர் நஜீப், பொதுச் சேவை பணி யாளர் அல்லர் என்ற அடிப்படையில் துன் மகா தீர், டத்தோஸ்ரீ கையிருடீன் அபு ஹசான் மற்றும் பெர்சத்து கட்சியின் முன்னாள் உறுப்பினர் அனினா சாடுடீன் ஆகியோர் தொடுத்த வழக்கு மனுவை உயர்நீதிமன்றமும் மேல் முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
எனினும் துன் மகாதீர், நேற்று கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவு அலுவலகத்தில் இந்த மேல் முறையீடு மீதான மனுவை ஹனிப் கத்ரி அப்துல்லா வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் சமர்ப்பித்துள்ளார்.
மகாதீர், கையிருடீன் மற்றும் அனினா ஆகியோர், 260 கோடி வெள்ளி இழப்பீடு கோரி கடந்தாண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்தில் பிரதமர் நஜீப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
Read More: Malaysia Nanban News paper on 29.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்