டத்தோ கிராமாட் சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பில் பதின்ம வயதைச் சேர்ந்த இருவர் மீது நேற்று கட்டாய மரண தண்டனை விதிக்கப்ப டக்கூடிய 23 கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.மொத்தம் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் பலியான அச்சம்பவத்தை தொடர்ந்து கைதான ஏழு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவருமே 16 வயது சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட மற்ற ஐவர் மீதும் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.கம்போங் டத்தோ கிராமாட், ஜாலான் கிராமாட் ஹுஜோங் என்ற முகவரியில் உள்ள சமயப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கும் அதிகாலை 6.45 மணிக்கும் இடையே அவ்விருவரும் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றப்பதிவில் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பதின்ம வயதைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீதிமன்ற நடவடிக்கைகள் பூட்டிய அறைக்குள் நடத்தப்பட்டன. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 7 மணி முதல் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஊடக பிரதிநிதிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.நீதிமன்ற அறைக்குள் முன்கூட்டியே அமர்ந்திருந்த பொதுமக்களும்,பத்திரிகையாளர்களும் போலீசாரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நீதிமன்ற அறைக்கு வெளியே ஒரு போலீசாரும் பல்வேறு நீதிமன்ற அதிகாரிகளும் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. அரசு தரப்பு சார்பில் துணை வழக்கறிஞர் ஒஸ்மான் அப்துல்லா ஆஜரான அதே சமயம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Malaysia Nanban News Paper on 29.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்