தொழிலாளர் சேமநிதி வாரியத்திற்கு (இ.பி.எப்.) சொந்தமான பணத்தில் 1,600 கோடி வெள்ளியை அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு பதிலாக குறைந்த வருமானத்தை பெறக்கூடிய இ.பி.எப். சந்தாதாரர்களை உள்ளடக்கிய தொழிலாளர்களுக்கு வாங்கத்தக்ககூடிய சுமார் 2 லட்சம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு, மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யூ.சி.) முழு வீச்சில் நெருக்குதல் கொடுக்க விருக்கிறது.
நாட்டில் உள்ள 65 லட்சம் இ.பி.எப். சந்தாதாரர்களின் நலனை காப்பதற்கு இத்தகைய ஒரு கடுமையான அழுத்தத்தை கொடுப்பதற்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்.டி.யூ.சி. தயாராகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஜே. சோலமன் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அமெரிக்காவில் கட்டமைப்பு பணிகளுக்கு மலேசியாவின் இ.பி.எப். வாரியம் 4 பில்லியன் டாலரை கிட்டத்தட்ட 1,600 கோடி வெள்ளியை முதலீடு செய்யும் என்று அறிவித்து இருப்பது எம்.டி.யூ.சி.யை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக சோலமன் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மொத்தம் ஒரு கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பி.40 என்று சொல்லக்கூடிய குறைந்த வருமானம் உடையவர்கள் அதாவது 3,900 வெள்ளிக்கும் குறைவாக சம்பளம் வாங்குகின்றவர்கள் பலர் உள்ளனர். எம்.40 என்று சொல்லக்கூடிய 8,390 வெள்ளிக்கும் குறைவான சம்பளம் பெறுகின்றவர்களும் அதிகமாக உள்ளனர்.
Read More: Malaysia Nanban News Paper on 28.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்