சாலை விபத்தில் சிக்கியவரைத் தேடி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் வேறு இடத்தில் மற்றொரு கேஸ் இருப்பதாக சாக்கு போக்குக் கூறி அலட்சியமாக ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் அங்கிருந்து சென்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்களான பி.எஸ்.கிருஷ்ணன், ஹிண்ட்ராப் போராட்ட வாதி மூர்த்தி பெரியப்பா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் நண்பகல் 12.00 மணியளவில் இந்திய இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். உடனடியாக போலீசுக்கும் ஊத்தான் மெலிந்தாங் கிளினிக் கெசிஹாத்தானுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவ உதவியாளரும் ஆறு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுங்கை சுமுன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் நோயாளி ஒருவர் உள்ளார் அவரை ஏற்றிக் கொண்டு தெலுக் இந்தான் மாவட்ட மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து விட்டார்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 27.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்