நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரி நான்கு பிள்ளைகள் காணாமல் போகின்றனர். இவ் வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மட்டும், இந்த 181 நாட்களில் 723 பிள்ளைகள் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 427 பேர் என பாதிக்கும் மேற்பட்டோர் சுதந்திர பறவைகளாக வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலான வர்கள் பதின்ம வயது பெண்கள் என்று அரச மலேசிய போலீஸ் படையின் உதவி ஆணையர் ஓங் சின் லான் கூறினார். இப்பெண்கள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மிகவும் அபாயகரமான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
போலீஸ் துணை சூப்பரிண்டெண்டன் இ.சரோஜாவும் கலந்துகொண்ட இணை சந்திப்பு ஒன்றில் அவர் இவ் விவரங்களை வெளியிட்டார் என தி ஸ்டார் நாளேடு தெரிவித்தது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனோவியல் ரீதியிலான பாதிப்பு அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தங்கள் வாழ்வில் சுதந்திரத்தை தேடி இவர்கள் தங்கள் குடும்பத்தை புறக்கணித்து விட்டு வெளியே வருகின்றனர். பெரும்பாலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களுக்கு கிடைக்கும் சில நண்பர்களே இதற்கு காரணமா கின்றனர் என்று ஏசிபி ஓங் கூறினார்.
இந்த சிறுமிகள் இடைநிலைப் பள்ளிக்கு போகும்போது அவர்களின் குணநலன்கள் மாற்றம் காண்கின்றன. உளவியல் ரீதியில் அவர்களுக்கு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் உணர்ச்சிகள் வெளிப்பட தொடங்குகின்றன.
அந்த வயதில், தங்களுக் கென்று ஒரு சொந்த அடையாளம் வேண்டும், சொந்த அபிப்பிராயம் வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். எப்போதும் தனி மையில் இருக்கவே விரும்புவார் என்றார் அவர்.
இவ்வாண்டில் முதல் பாதியில் நிகழ்ந்த சம்பவங்களில் 447 பேர் பெண்களும், 276 பேர் ஆண்க ளுமாவர். அது மட்டுமின்றி, அந்த மொத்த எண்ணிக்கையில் 345 பேர் என கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுமார் 378 பேர் இன்னும் காணாமல் போனவர் பட்டியலில் தான் உள்ளனர்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER on 27.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்