பகாவ், கெட்கோ நிலத்தை ஏலத்தில் எடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக மக்கள் செய்த புகாரை தொடர்ந்து பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ அந்தஸ்தை கொண்ட இரு இந்திய சகோதரர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று அதிரடியாக கைது செய்துள்ளது. 54, 58 வயதுடைய அவர்கள், தொடர்ந்து காவலில் தடுத்து வைக்கப்படுவதற்கான ஆணையை பெறுவதற்கு இன்று காலையில் புத்ரா ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவர்.
பெட்டாலிங் ஜெயாவில் பிரபல நிறுவனத்தை நடத்திவரும் அந்த இரு சகோதரர்களை எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் கைது செய்து இருப்பதை அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்ளி அமாட் நேற்று உறுதிபடுத்தினார். இந்த கெட்கோ நில விவகார ஊழல் தொடர்பாக எம்.ஏ.சி.சி. மேற்கொண்டு வரும் விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் சொன்னார்.
அந்த இரு இந்திய சகோதரர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முறையே தலைமை இயக்குநர் மற்றும் தலைமை செயல்முறை அதிகாரியாக பொறுப்பில் உள்ளனர். நேற்று காலையில் விசாரணைக்காக புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அழைக்கப்பட்ட அவர்கள், பின்னர் கைது செய்யப்பட்டு லாக்காப்பில் அடைக்கப்பட்டுள்ளனர்.
READ MORE: MALAYSIA NANBAN NEWS PAPER on 26.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்