பி.கே.ஆர். கட்சியின் முக்கியத் தலைவரும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சிவராசாவின் அரசியல் செயலாளரான அவரின் சகோதரரின் மகன் மற்றும் இதர இரண்டு உதவியாளர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டு இருப்பது, மக்களின் பிரதிநிதி என்று கூறி, போராடி வரும் அரசியல் தலைவர்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி வருகிறது.
மனித உரிமை போராட்டவாதி என்று தன்னை எப்போதுமே முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கும் சிவராசாவின் மூன்று உதவியாளர்கள், குடி நுழைவுத்துறை தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதற்கு 55 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் மலேசிய ஊழல் தடுப்பு ( எம்.ஏ.சி.சி.) ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர், சிவராசாவின் 45 வயதான அரசியல் செயலாளர். இவர் சிவராசாவின் அண்ணன் மகன் என்றும் கூறப்படுகிறது. நவீன் குலராசா என்ற தனது அந்த அரசியல் செயலாளர் மற்றும் தனது தனிப்பட்ட உதவியாளர் ஜோசுவா கலைச்செல்வன் மற்றும் அலுவலக அதிகாரி நிக்கோல் கோம் ஆகியோர் அத்தகைய குற்றத்தை புரிந்து இருக்க மாட்டார்கள் என்று சிவராசா நேற்று மறுத்துள்ளார்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER on 23.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்