தீபாவளித் திருநாள் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில் தீபாவளிச் சந்தை கடைகளை கோருவதில் பல இடங்களில் பல்வேறு தரப்புக்கு இடையில் மோதல்கள் வலுத்து வருகின்றன. கடைகளை கோருவதிலும் பிடிப்பதிலும் கடும் போட்டாப் போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் கடைகளுக்கான இடங்களை குறைந்த விலையில் வாங்கி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு அவர்களுக்கு இடையிலான மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன.
காலங்காலமாக தீபாவளி சந்தைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், குறிப்பிட்ட கும்பல்களிடமிருந்து கடைகளுக்கான இடங்களை பெற வேண்டி பல ஆயிரம் வெள்ளி செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். இந்திய வர்த்தக சங்கங்கள், அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் கடைகளுக்கு கோட்டா முறையில் கடைகளை கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சங்கத்தின் உறுப்பினர்களின் பெயரில் இவ்வளவு கடைகள் வேண்டும் என்று கோரிய பின்னர் கடைகள் கிடைத்தப்பின்னர் அந்த கடைகளை பல ஆயிரம் வெள்ளிக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகின்றனர்.
இதனால் அதிகமான விலை கொடுத்து கடைகளை வாங்குபவர்கள் கொதிப்படையத் தொடங்கினர். தீபாவளி காலத்தில்தான் கொஞ்சம் பணம் பார்க்க முடியும் என்று கருதி 20,25 நாட்களுக்கு வியாபாரம் செய்கின்றவர்கள், எதிர்பார்த்த வர்த்தகத்தையும் லாபத்தையும் பார்க்க முடியாத நிலைக்கு கடந்த காலங்களில் தள்ளப்பட்டுள்ளனர்.
READ MORE: NANBAN NEWSPAPER ON 21.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்