பகாவ், கெட்கோ நில விவகாரத்தில் மற்றொரு அதிரடி திருப்பமாக, 69 வயது இந்திய ஆடவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. நில ஏல விற்பனையில் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் நேற்று மதியம் வாக்குமூலம் பதிவுக்காக எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பதை எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்தியுள்ளது.
புத்ரா ஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அந்த ஆடவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு தாங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஸுல்கிப்ளி அஹ்மட் இங்கு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் முக்கியமான சாட்சியாக விளங்கும் அந்த ஆடவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நேற்று மதியம் 2.45 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்ப டுவதற்காக அந்த ஆடவர் தலைமையகம் வந்திருந்தார் என்று அவர் சொன்னார்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்