மலேசியாவில் தங்கி வேலை செய்யும் இந்திய பிரஜைகள், பல்வேறு விவகாரங்களில் சொந்த தூதரகத்தினா லேயே அலட்சியம் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இங்குள்ள இந்திய பிரஜைகளில் கிட்டத்தட்ட 60 அல்லது 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், தாங்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடும் போது, இந்தி பேசும் அதிகாரிகள், மிகுந்த
அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் தாங்கள் அறவே மதிக்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவில் 60 முதல் 70 விழுக்காட்டினர் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்த போதிலும் இந்திய தூதரகத்தில் முக்கிய அலுவல்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஏதாவது ஒரு விவகாரத்தை கையாள வேண்டு மானால் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாக இங்கு பூச்சோங்கில் வேலை செய்யும் மதுரையை சேர்ந்த விஸ்வநாதன் தெரிவித்தார்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 16.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்