img
img

வளர்மதிக்கு ஏன் குண்டர் சட்டம்?!' - சேலம் கமிஷனருக்கு திங்கள்கிழமை வரை கெடு
வியாழன் 03 ஆகஸ்ட் 2017 15:52:45

img

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதியின் மீதான குண்டர் சட்ட வழக்கில், வரும் திங்கள்கிழமையன்று பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என சேலம் காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது' என தொடர்ச்சியாகப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 15ம் தேதியன்று புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு ஜூலை 12-ம் தேதியன்று சேலம் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளி டம் துண்டறிக்கை ஒன்றை விநியோகித்தார். அப்போது அவருடன் இருந்த ஜெயந்தி என்ப வரும் கைது செய்யப்பட்டார். வளர்மதியை மட்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்தார். இதையடுத்து, சேலம் மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு வளர்மதி மாற்றப்பட்டார். இந்நிலையில், வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அமர்வில் இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்மதியின் சார்பில் வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, செங்கொடி, கேசவன் ஆகியோர் ஆஜராகினர். 'புதுக்கோட்டையில் கடந்த 15-ம் தேதியன்று அதிமுகவைத் தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்ற அனுமதி பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தான் வளர்மதி துண்டறிக்கை வழங்கினார்; அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையின்படி அவர் இந்தப் பிரசாரத்தில் ஈடு பட்டார்; அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எந்த முகாந்திரமும் இல்லை' என வளர்மதியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது. 'இதற்கிடையில் வளர்மதியை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும்' என்றும் மாதையன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் திங்கட்கிழமையன்று விசாரணையைத் தள்ளிவைத்தனர். அன்றைய தினம், 'சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்' எனவும் உத்தரவிட்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img