கோலாலம்பூர், மாமா மச்சான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குழந்தை பிரிஷாவின் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுக்காக வழங்கப் படவுள்ளது. பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்எம்எஸ் சாரா இயக்கத்தில் பென் ஜி போன்றோர் நடிப்பில் உரு வாகியிருக்கும் மாமா மச்சான் மலேசிய தமிழ் திரைப்படம் இன்று மலேசியா முழுவதும் 18 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் மாமா மச்சான் குழுவினர் ஒரு முக் கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். மாமா மச்சான் திரைப்படத்தின் முதல் நாள் திரையரங்கு வசூல் முழுவதையும் குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு தானமாக வழங்குவது என்ற முடிவை மாமா மச்சான் இயக்குநர் சாராவும் நடிகர் பென் ஜியும் ஒரு காணொளி மூலம் அறிவித்துள் ளனர். 18 திரையரங் குகளில் முதல் நாள் 5 காட்சிகள் என மொத் தம் 90 காட்சிகளின் வசூல் முழுவதும் அளிக்கப்படுகிறது. குழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் வெள்ளி வரை செலவாகும் நிலையில் மாமா மச்சான் திரைப் பட குழுவினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்