(ஆறுமுகம் பெருமாள்) சிப்பாங், ஆக. 3 காங்கோ நாட்டிலிருந்து மலே சியாவிற்கு கடத்தி வரப்பட்ட யானைத் தந்தங்கள் மற்றும் அபுதாபி நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட அழுங்கு ஓடுகளை கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலைய சுங்கைத் துறையினர் வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து நேற்று இங்குள்ள கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்த சுங்கத் துறை யின் அமலாக்கப்பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் பூட்ஷி பின் மான், கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதியன்று இரவு 8.30 மணி யளவில் எதோப்பின் ஏர் விமானம் மூலம் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் உள்ள சரக்குக் கிடங்கிற்கு போலி முகவரியிடப்பட்டிருந்ததுடன் வான் போக்குவரத்துக்கான சிட்டையில் FISH MAW என பொய்யான தகவலுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆறு மூட்டை களை சோதனையிட்டதாக கூறினார். சுங்கத்துறையின் சோதனையின் போது 300.90 கிலோ கிராம் எடையைக் கொண்ட வெ.38 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புடைய அழுங்கு ஓடுகள் இருப் பதை கண்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளான ஜூலை 30ஆம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் லாகோஸ் அபுதாபியிலிருந்து ஈத்திஹாட் விமானம் வழியாக கே.எல்.ஐ.ஏ சரக்கு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இரு பெட்டிகளை சோதனையிட்ட சுங்கத் துறையினர் அதனுள் 75.74 கிலோ கிராம் எடை யுடைய வெ. இரண்டு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய 23 யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்ட தாக தெரிவித்த டத்தோ முகமட் பூட்ஷி மேற்கண்ட இரு பெட்டி களில் உணவுப் பொட்டலங்கள் இருப்பதாக வான் போக்கு வரத் துக்கான சிட்டையில் போலி யான தகவல் எழுதப்பட் டிருந்த நிலையில் அதனுள் யானை தந்தங்கள் இருந்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட் டுள்ளதாக கூறினார். கே.எல்.ஐ.ஏ. விமான நிலை யத்தின் வாயிலாக இவ்வாண்டு ஐந்து தடவை இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள் ளதாக குறிப்பிட்ட அவர், இதனை கட்டுப்படுத்தும் நோக் கில் சுங்கத்துறையின் அனைத்து நடவடிக்கை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்