கோலாலம்பூர், ஆஸ்ட்ரோ, மின்னல் எப்எம் ஆகியவற்றில் எண் கணித மேதை என வர்ணிக்கப்பட்டு மலேசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதையா மீது 13 மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தங்காக் காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை இவரின் வழக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் குற்றச்சாட் டுகள் கொண்டு வரப்பட்டன. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை டாக்டர் முதையா (வயது 58) நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். இவருக்கு வெ.15 ஆயிரம் ஜாமின் தொகையை நீதிபதி விதித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எண் கணித ஆற்றலின் மூலமாக எதிர் காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்த இவர் தங்காக் நகரிலுள்ள ஒருவரிடம் வெ.52 ஆயிரம் ஏமாற்றி மோசடி செய்ததாக ஏற் கெனவே இவர் மீது வழக்கு தொடரப்பட்டு தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். தஜூடின் ஜமால் முகமது என்ற தன் பெயரை இவர் முதையா என்று மாற்றி வைத்துள்ளார். எண் கணிதம் வழி பெயரை மாற்றி அமைத்துக் கொண்ட இவருக்கே அது பயனளிக்காமல் போனது. வானொலியில் இவர் பங்குபெறும் நிகழ்ச்சியை படைத்த பெண் அறிவிப்பாளர் மூச்சுக்கு முன்னூறு தடவை இந்நபரை ‘என்னங்க டாக்டர், எப்படிங்க டாக் டர், ஏங்க டாக்டர்’ என அழைத்து முதையாவை அறிமுகம் செய்து வைத்தார். இவர் எஸ்.ஆர்.பி வரையில்தான் கல்வி கற்றுள்ளார். ஆனால் எப்படி இவருக்கு டாக்டர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு டாக்டர் பட்டத்தை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மை நிலையை அறிய நீதிமன்றம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் வைத்த பெயரை சற்று மாற்றிக் கொண்டு சும்மா இருந்தாலே யாவும் கைக்கூடும் என்று சமுதாயத்திற்கு வழியை காட்டியவரும் இவர்தான். இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவரால் ஏமாற்றப்பட்ட மேலும் பலர் நாடு தழுவிய ரீதியில் இன்னமும் போலீஸ் புகார்களை செய்து வரு வதாக கூறப்படுகிறது. வியாபாரங்களை ஆரம்பிக்க எண்ணுபவர்களின் முதலீட்டு பணத்தை பூஜையில் வைத்து வழிபட்டு பின்னர் அதனை கொண்டு வியாபாரத்தை தொடங் கினால் சிறப்பாக இருக்கும் என கூறி இவர் வாங்கும் பணம் திருப்பி தரப்படாமல் வியாபாரக் கனவை இழந்து தவிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்