கோலாலம்பூர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நவீன மலேசியாவின் தந்தை என்று பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடைமொழி தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆவணங்கள் மற்றும் துல்லிய குறிப்பு விவரங்களை அடிப்படையாகக் கொண்டே கல்வி அமைச்சின் பாடப் புத்தகங்கள் எழுதப்படுவதால் துன் மகாதீரின் அந்த அடைமொழி தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்ஸிர் காலிட் தெரிவித்தார். மலேசியாவை நவீனமயமாக்கியவர் துன் மகாதீர். அவருக்கு வழங்கப்பட்ட நவீன மலேசியாவின் தந்தை என்ற அந்தஸ்து தொடர்ந்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்படுமா என்று சிகாம்புட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்விக்கு பதில் அளிக்கையில் மகாட்ஸிர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்