img
img

கெட்கோ விவகாரத்தில், மாணிக்கம் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வு காண்பாரா?
புதன் 02 ஆகஸ்ட் 2017 12:14:21

img

(துர்க்கா) சிரம்பான், பகாவ், கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் நடவு செய்திருந்த ரப்பர் மரங்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதியை தாமரை ஹோல்டிங்ஸிற்கு வழங்கு வதற்கு எடுத்த முடிவை ஆட்சேபிக்காமல் மௌனம் காத்த நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எல். மாணிக்கம், இனியாவது அந்த இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பாரா அல்லது தொடர்ந்து மௌனம் சாதிப்பாரா என்ற கேள்வி கணைகள் பாய்ந்துள்ளன. நெகிரி செம்பிலான் இந்தியர்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு அந்த மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் பல ஆண்டு காலமாக எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக மாணிக்கம் துணைப் போயிருப்பது இவர்கள் உண்மையிலேயே மக்கள் பிரதி நிதிதானா என்று கெட்கோ நிலக்குடியேற்றவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பக்கத்தில் உள்ள சீனப்பள்ளி கட்டுமானம், தங்கள் நிலத்தில் அத்துமீறிய பிரச்சினையை எதிர்நோக்கிய போர்ட்டிக்சன் செயிண்ட் லியோனார்ட்ஸ் தோட் டத் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் சீனப்பள்ளி அத்துமீறிய விவகாரத்தை நியாயப்படுத்தி, அந்த தோட்டப்பள்ளி சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமானது. அவர்கள் கதவை இழுத்து மூடினால் நான்கூட தோட்டத்துப்பள்ளிக்கு வர முடியாது என்று சைம் டார்பிக்கு வக்காளத்து வாங்கி பேசியவர் இதே ஆட்சிக் குழு உறுப்பினர் மாணிக்கம்தான். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தியர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் எதிராளிக்கு ஆதரவாக நின்று வக்காளத்து வாங்கும் மாணிக்கம், கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்களான நாங்கள் நடவு செய்த மரத்தை வெட்டி எடுப்பதற்கு தாமரை ஹோல்டிங்ஸிற்கு வழங்க முடிவு செய்த போது எப்படி கண்ணை மூடிக்கொண்டார் என்று வினவினர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 4 மந்திரி புசார்கள் பொறுப்பேற்ற காலத்திலிருந்து சுமார் 40 ஆண்டு காலமாக நீடித்து வருவது இந்த கெட்கோ நிலக் குடியேற்றவாசிகளின் பிரச்சினையாகும். நெகிரி மாநில மஇகாவிற்கு தலைமையேற்று ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்த டத்தோ முத்துப் பழனியப்பன், டத்தோ ராஜகோபாலு, டத்தோ வி.எஸ். மோகன், டத்தோ மாணிக்கம் ஆகியோர் எந்த அளவிற்கு எங்கள் பிரச்சினையை ஆட்சிக்குழுவில் பேசியிருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. இதன் காரணமாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுக் கெமாங் மஇகா தொகுதி மாநாட்டை தொடக்கி வைத்த கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கெட்கோ விவகாரத்தில் மஇகா தலைவர்கள் வாயை திறக்காதது குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கத்தை விளாசியி ருக்கிறார். இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் மஇகாவும் அதன் தலைவர்களும் கெட்கோ விவகாரத்தில் தொடக்கத் திலிருந்து பாரபட்சமாக நடந்து கொண்டனர். ஜெலுபு தொகுதி மஇகாவிற்கு தலைமையேற்ற ஒரு பெண்மணியிடம் கெட்கோ மக்கள் நம்பி கொடுத்த 10 லட்சம் வெள்ளி பணத்தை கொண்டு நடத்தப்பட்ட வழக்கும் கடைசியில் தோல்வியில் தான் முடிந்தது. இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாரோ ஒருவரால் வஞ்சிக்கப்பட்ட மக்களாக விளங்கும் கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் நலன் குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் வாயே திறக்காமல் மௌன சாமியாராக மாணிக்கம் அமர்ந்திருந்த காரணத்தினால்தான் எங்கெங்கோ வந்த தனியார் நிறுவனங்கள் எல்லாம் அந்த ஏழை பாட்டாளிகளின் நிலத்தில் கையை வைத்து அவர் களின் உரிமையை உரசிப்பார்த்துக்கொண்டு இருக்கின்றன. விக்னேஸ்வரனின் அறிவுறுத்தலுக்கு பிறகும் கெட்கோ மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் மாணிக்கம் அக்கறை காட்டாமல் இருப்பாரேயானால் அது மாநில மஇகாவிற்கு விழுந்த பேரிடியாகவே கருதப்படும் என்று உள்ளூர்வாசிகள் தெரி வித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img