கோலாலம்பூர், நாடு முழுவதும் உள்ள 176 பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக இருக்கிறது. இந்த பள்ளிகள் மூடப்படலாம் அல்லது இதர பள்ளிகளுடன் இணைக் கப்படலாம் என்று கல்வித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் கோடி காட்டினார். ஒரு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 150க்கும் குறைவாக இருந்தால் அந்தப் பள்ளி குறைவான மாணவர் எண்ணிக்கை என்று கல்வியமைச்சு கருது கிறது. பள்ளி மாணவர் எண்ணிக்கை பிரச்சினை குறித்து செபூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அகமது லாய் பூஜாங் கேள்வி எழுப்பினார். இதற்கு கல்வியமைச்சர் விளக்கம் தந்தார். 2,986 பள்ளிகள் 150க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ளது. இதில் 2,058 தேசியப் பள்ளிகள். 578 சீன ஆரம்பப் பள்ளிகள். 360 தமிழ்ப்பள்ளிகள் என்று கல்வியமைச்சர் மாட்ஸிர் காலிட் சுட்டிக் காட்டினார். 44 பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளது. 132 பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. ஒரு பள்ளியினை மூடுவதோ அல்லது மற்றொரு பள்ளியுடன் இணையும்போது அமைச்சு ஒரு போதும் கட்டாயப்படுத்தாது. இது பெற்றோர்களின் ஒப்புதலை பொறுத்த விஷயம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்