(ஆறுமுகம் பெருமாள்) சிப்பாங், சுங்கத் துறையில் பணியாற்றுவதற்காக விண்ணப்பம் செய்யும் இந்திய இளைஞர்கள் நேர்முகப்பேட்டிக்கு வருவதற்கு முன்பாக தங்களை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும். காரணம், இத்துறையில் இந்திய இளைஞர்களை தேர்வு செய்ய முடியாமல் போவதற்கு இது அடிப்படையாக விளங்கு கிறது என்று சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் துளசி தெரிவித்துள்ளார். நாடு தழுவிய அளவில் உள்ள சுங்கத்துறை இலாகாக்களில் தற்போது 600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றிவருகின்றனர் என்பதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்நிலை, நடுநிலை அதிகாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். சுங்கத்துறையில் பணியாற்றுவதற்காக எல்லா இனத்தையும் சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யும் அதேவேளை இந்திய இளைஞர்களும் விண்ணப்பம் செய்கின்றனர். எனினும் நேர்முகப் பேட்டியின்போது அவர்கள் புரிகின்ற ஒரு சில தவறுகளால் தேர்வு செய்வதிலிருந்து தவிர்க்கப்படுகின்றனர் என அவர் கருத்துரைத்தார். இதனிடையே, சுங்கத்துறையில் தங்களின் வழக்கமான பயிற்சியினை முடித்துக்கொண்டுள்ள அதிகாரிகளை குறிப்பிட்ட பிரிவுகளில் சேவையாற்ற அமர்த்துவதற்கு முன்பாக அவர்களுக்கு சிறப்பு சோதனையொன்று வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். அரசாங்க இலாகாக்கள் எதிலும் இதுவரை செய்திடாத ஒரு நடவடிக்கையை முதன் முதலாக சுங்கத்துறை மேற்கொள்ளவிருக்கிறது. வழக்கமாக பயிற்சி முடிந்து சேவையில் அமர்த்தப்படுவோரில் சிலரை பொருத்தமான பிரிவுகளில் நியமனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விடு வதாக குறிப்பிட்ட அவர், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி பயிற்சி முடித்துள்ள அதிகாரிகளை சம்பந் தப்பட்ட பிரிவுகளில் நியமனம் செய்வதற்கு முன்பாக அவர்கள் ஒரு சில சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இவ்வாறு செய்வதன் வாயிலாக சரியான பிரிவிற்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்ய இயலும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பண்டார் பாரு சாலாக் திங்கியில் நடைபெற்ற யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கான தன்முனைப்பு பயிற்சியினை துவக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத்துறையில் பணியாற்றி வருகின்ற அதிகாரி பிரவீந்திரன் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழு ஒன்றிணைந்து இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். தன்முனைப்பு நிகழ்வில் முன்னதாக பேசிய சுப்ரமணியம் துளசி, இந்நாட்டில் இந்திய சமுதாயத்தினர் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமெனில் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து வருவதன் காரணமாக இன்று சுலபமான வேலை வாய்ப்புகளுடன் சொகுசான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வருகின்றனர். நமது சமுதாயத்தில் காணப்படுகின்ற ஆரோக்கியமற்ற வன்முறை கலாச்சாரம் தொடராமல் இருக்க வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கு மாற்று மருந்தாக அமைய முடியும். இந்நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பதால் சிறு பிராயத்தில் இருக்கும் மாணவர்கள் கருத்தோடு கல்வி கற்க வேண்டுமென ஆலோசனை தெரிவித்தார். இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய ஏற்பாட்டாளரான பிரவீந்திரன், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுங்கத்துறையில் பணியாற்றி வரும் இந்திய அதிகாரிகளின் ஆதரவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு நாள் தன்முனைப்பு பயிற்சி தொடர்ந்து ஆண்டு தோறும் நடை பெறும் என்பதுடன் இடைநிலைப்பள்ளிகளிலும் இது போன்றதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறினார். சிப்பாங் மாவட்டத்தில் உள்ள டிங்கில், பியூட், அம்பர் தெனாங் ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளான டத்தோ. ஞானசேகரன், கலைதேவன், சுப்ரமணியம், சிப்பாங் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்தலைவர் பாக்கியவதி ஆகியோ ரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்