நெகிரி செம்பிலான் மாநிலத் தின் ஜெம்பூல் மாவட்டத்தில் ஒரு கருப்பு வரலாறாக மாறியிருக்கும் கரும்புத் தோட்ட நிலக் குடி யேற்றத் திட்டம் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களின் எதிர் காலத்தினை கேள்விக்குறி யாக்கியுள்ளதா என்ற கேள்வியை ஏவுகணை முன் வைக்கின்றது! கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் முழு மூச்சில் செயல்பட்டு வருவதை தற்போதைய மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முகம்மது ஹசானின் (Dato sri utama Haji. Mohammed Hassan) கடந்த வார பத்திரிகைச் செய்தி தெளிவு படுத்துவதை யாராலும் மறுக்க முடியாது என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. 1967ஆம் ஆண்டில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமான என்.யூ.பி.டபள்யூவின் பொருளாதார நிறுவனமான கெட்கோ நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்திருந்த நில விண்ணப்பத்திற்கு ஏற்றவாறு சுமார் 4700 ஏக்கர் நிலப் பரப்பினை நெகிரி செம்பிலான் மேம்பாட்டு நிறுவனம் (PKNS) 66 ஆண்டு கால வரையறை கொண்ட நிலப் பட்டாவினை அங்கீகரித்து வழங்கியிருந்த நிலையில் சுமார் 510 இந்திய நிலக் குடி யேற்றக்காரர்கள் பணம் செலுத்தி 'கானி நிலம் வேண்டும்' எனும் கனவு மெய்ப்படும் என நம்பி ஏமாந்தவர்களாக இன்று வலம் வருவதற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் இரட்டைப் போக்கே காரணம் என்பதை மறுக்க முடியுமா? 'நம்பிக்கை' கானல் நீரா? கடந்த 60 ஆண்டுகளாக நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்குக் கணிசமான இந்தியர் வாக்குகளே அஸ் திவாரம் அமைத்திருப்பதை தைரியமாக மறுக்க முடியாத நிலையில் மலேசியாவில் இந்தியர்களுக்காக உருவாக்கம் கண்ட 'கெட்கோ' நிலக்குடி யேற்றத் திட்டத்திற்கு எதிராக இன்றைய தேசிய முன்னணி மாநில அரசாங்கம் செயல்பட்டு வருவது நியாயமா? என ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் கேட்பதை இன்று வரை உணர வில்லையா? என ஏவுகணை கேட்கின்றது. 1970-ஆம் ஆண்டுகளில் உருவான கெட்கோ நிலத் திட்டம் நிர்வாகக் கோளாறினால் பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருந்த நிலையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் (Mesyuarat exco kerajaan Negeri) கம்போங் செராம்பாங் இண்டா (Kampung Serempang Indah) நிலக்குடியேற்றக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையாக கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்களுக்கு 8 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்கான முடிவினை எடுத்திருந்ததை 16.2.1990-இல் வெளியான பெரித்தா ஹரியான் (Berita Harian 16.2.1990) செய்தி தெளிவுபடுத்தியிருந்தது. அப்போதைய நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஹாஜி முகம்மது ஈசா அப்துல் சாமாட் (Datuk Haji Mohd.Isa Abdul Samad) அச்செய்தியின் வழி வழங்கியிருந்த வாக்குறுதி களை ஏவுகணை பட்டியலிடு கின்றது. * ஒரு மாத காலத்தில் 400 இந்திய குடியேற்றக்காரர்களுக்கு 8 ஏக்கர் நிலத்திற்கான நில உரிமைப் பத்திரம் (Geran) வழங்கப்படும். * நிலக் குடியேற்றக்காரர் களுக்கு நிலப்பட்டா வழங்கப் பட்ட பின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். * அரசாங்க நிறுவனங்களான ரிஸ்டா, பெல்டா, பெஃல்க்கிரா போன்றவற்றின் வழி நிலம் மேம்படுத்தப்படும். * கெட்கோ நிறுவனம் வாங்கியிருக்கும் கடன்களுக்கு தீர்வு காணப்படும். மேற்காணப்படும் விவரங்கள் அனைத்தும் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டும் செயல்படுத்தப்படாததற்கு முக்கியமான காரணம் எதுவாக இருக்கும் என்பதை ஏவுகணை யால் ஊகிக்க முடிகின்றது. மலேசியாவிலேயே இந்தியர் களுக்காக உருவாக்கம் கண்ட நிலத் திட்டத்தில் மலாய்க்காரர்கள் இடம் பெற வேண்டும் என்பதற்காக 10 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தினை விட்டுக் கொடுத்த இந்தியர்களுக் குச் சேர வேண்டிய நிலத்தைக் கூட தேசிய முன்னணி மாநில அரசாங்கம் முயற்சி செய் கின்றதா? தேசிய முன்னணியில் இடம் பெற்றுள்ள மஇகா ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் நலன்களைப் புறந்தள்ளியிருப்ப தற்கு இனியும் சாட்சிகள் வேண்டுமா? உண்மைத் தகவல்கள்! லோட்டஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ள கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்களின் 4700 ஏக்கர் நிலப் பரப்பிலான நிலத்தில் 1200 ஏக்கர் நிலப் பரப்பினை 170 நிலக் குடியேற்றக்காரர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான முடிவினை யார் செய்தது? நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நிலப் பதிவு செய்தது நியாயமா? லோட்டஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு காவல் துறையினர் உடந்தையாகச் செயல்படுகின்றனரா? போன்ற கேள்விகளுக்கான விடையை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற சம்பவங்கள் பதில் கூறும் என்பதை ஏவுகணை கூற வேண்டியதில்லை. கெட்கோ நிலக் குடியேற்றக் காரர்களின் முழுமையான விவரங்களைப் பட்டியல் 1-இன் வழி தெரிந்து கொண்டால் இந்தியர்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டிருக்கும் அவலங் களை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்