கோலாலம்பூர், இறந்து விட்டதாக பட்டியலிட்டு உயிருடன் இருக்கும் ஒருவருக்கு வருமான வரிப் பாக்கியை செலுத்து வதற்கான கடிதத்தை அனுப்பியதற்கான சம்பந்தப்பட்ட நபரிடம் வரு மான வரித்துறை மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி மிகப் பரபரப்பாக பேசப் பட்டு வரும் நிலையில், தங்களுடைய தகவல், பதிவுத் தகவலில் நிகழ்ந்த தவறுக்காகவும் சம்பந்தப்பட்ட நபரின் தற்போதைய நிலை என்ன? என்பதை கண்டறிவதில் ஏற்பட்ட கவனக் குறைவுக்காகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வருமான வரித்துறை பத்திரிகை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இது குறித்து தாங்கள் மேற்கொண்டு விசாரித்ததில் சம்பந்தப்பட்ட நபரான 45 வயதுடைய போலீஸ்காரர் அமரான் முகமட் என்பவர் உயிரோடுதான் இருக் கிறார் என்பது உறுதியாகி இருப்பதாக அது குறிப்பிட்டது. அண்மையில் வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தைப் படித்துப் பார்த்து அமரான் முகமட் அதிர்ச்சி அடைந்து போனார். அதில், அம்ரான் இறந்து விட்ட நிலையில், அவரது வாரிசுகள் அவருடைய 1,728 ரிங்கிட் 50 காசு வருமான வரிப் பாக்கியை செலுத்தவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதில் தாம் இறந்து விட்டதாக வந்த தகவல் தான் அமரானுக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அளிப்பதாக அமைந்தது.இதனிடையே ஒருவர் இறந்து விட்டாலும், அவர் இறக்கும் வரையில் பெற்ற வருமானத்திற்கான வரியை அவருடைய அடுத்தடுத்த வாரிசுகளிடமிருந்து வசூலிக்க சட்ட ரீதியில் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்திருக்கிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்