(ஆர். குணா) செந்தூல், அட்டைப் பெட்டிக்குள் 6 மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் செந்தூல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.செந்தூல் ஜாலான் கோவில் உலுவில் குப்பைகளை கூட்டி கொண்டிருந்த பெண் ஒருவர் அட்டைப் பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை பார்த்து அப்பெட்டியை திறந்தார். அப்பெட்டிக்குள் துண்டால் சுருட்டப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.அக்குழந்தை இறந்து விட்டதை உணர்ந்த அப்பெண் உடனே அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.அப்பெட்டிக்குள் இருந்த குழந்தையின் சடலத்தை பார்த்த ஒருவர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.தகவல் கிடைத்தவுடன் செந்தூல் மாவட்ட போலீஸ்படை யினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர் என்று அதன் போலீஸ்படைத் தலைவர் ஏசிபி முனுசாமி கூறினார். அட்டைப் பெட்டிக்குள் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டதுடன் சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். அக்குழந்தையின் மரணத்திற்கான கார ணங்கள் சவப்பரிசோதனைக்கு பின் தெரியவரும் என முனுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்