(ஆர். குணா) கோலாலம்பூர், மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஐவரை கோலாலம்பூர் போலீஸ்படை யினர் நேற்று கைது செய்தனர்.முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மக்களை தொடர்பு கொள்கின்றனர்.மக்களை தொடர்பு கொள்ளும் அக்கும்பல் குறைந்த வட்டியில் பணத்தை கடனுக்கு தருவதாக கூறுகின்றது. அப்படியே கடன் பணம் வேண்டும் என்று கூறினால் உடனே 10 சதவீதம் பணத்தை போடுங்கள். அடுத்த 3 நாட்க ளில் கடன் பணமும் உங்கள் வங்கிக் கணக்கில் போடப்படும் என ஆசை வார்த்தைகள் பேசுகின்றனர்.இதை நம்பி 10 சதவீத பணத்தை கொடுக்கும் மக்கள் பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் ஏமாந்து விடுகின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் பல புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். இப்புகார்களின் அடிப்படையில் தான் புக்கிட்ஜாலில் வட்டாரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தினர். அச்சமயத்தில் வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் மேற்கொண்ட சோத னைகளின் வாயிலாக ரொக்கம் 7,655 வெள்ளி, கைத்தொலை பேசிகள், ஏடிஎம் அட்டைகள், மெர்சடிஸ் பென்ஸ் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 வயது டையவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் அடுத்த 4 நாட்களுக்கு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ்படையின் வர்த்தக குற்றப்பிரிவின் தலைவர் முகமட் லுட்ஃபி இஸ்மாயில் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்