img
img

கெட்கோ விவகாரத்தில் வாயைத் திறக்கமாட்டேன் என்று சொன்ன நெகிரி மந்திரி புசார்.
சனி 29 ஜூலை 2017 13:01:08

img

(துர்க்கா) சிரம்பான், நெகிரி செம்பிலான், பகாவ் கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் வாயை திறக்க மாட்டேன் என்று ஒவ்வொரு சட்டமன்றக்கூட்டத்திலும் பதிலளிக்க தெரிந்த மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், இப்போது மட்டும் அவ்விவகாரத்தில் அடிபணிய மாட் டேன் என்கிறார் என்றால் அதிகார திமிரா என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். தங்களின் நில உரிமையை பறிகொடுக்கும் இக்கட்டான நிலையிலும் தங்களின் உரிமைக்காக முழு வீச்சாக போராடிக்கொண்டு இருக்கும் கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்கள், இந்தியர்கள் என்பதால் மந்திரி புசாருக்கு இவ்வளவு அலட்சியமா? என்று போர்ட்டிக்சன் பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர் மு. ரவி கேள்வி எழுப்பினார். தங்களின் நில உரிமையை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனத்திற்கு எதிராக தாங்கள் தொடுத்துள்ள வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த நிறுவனம் எவ்வாறு தங்கள் நிலப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ரப்பர் மரங்களை வெட்டி லோரியில் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும் என்று கோரி, கடந்த வாரம் லோரிகளை வழிமறித்து நிலக்குடியேற்றக்காரர்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு முறை அவர் கள் நடத்திய இந்தப் போராட்டத்தின் போது அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தங்களின் உரிமை குறித்து எந்தவொரு அக்கறையும் காட்டாத போலீசார் அந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் போலீசார் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்றும் கூறி நிலக்குடியேற்றக்காரர்கள், நேற்று முன்தினம் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் போலீஸ் தலை மையகத்தில் ஒன்றுகூடி மகஜர் ஒன்று சமர்ப்பித்து தங்களின் அதிருப்தியையும் தெரிவித்து வந்துள்ளனர். அவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், கெட்கோ நிலப்பகுதியில் நடைபெறவிருக்கும் விவசாய மேம்பாட்டு நடவடிக்கையில் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைக்கும் மாநில அர சாங்கம் அடிபணியாது என்றும் இடையூறு விளைவிக்கின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்ததை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் வன்மையாக கண்டித்தனர். இந்த கெட்கோ நிலக்குடியேற்றக்காரர்கள் பிரச்சினை ஒரு மந்திரி புசாரின் ஆட்சிக்காலத்தில் நடந்தது அல்ல. நான்கு மந்திரி புசார்கள் காலத்தில் இப் பிரச்சினை நீடித்துக்கொண்டு இருக்கிறது. நெகிரியின் மந்திரி புசாராக இருந்த டத்தோ மன்சோர், அவருக்குப் பிறகு டத்தோ ராயிஸ் யாத்திம், அவருக்கு பிறகு டான்ஸ்ரீ முகமட் இசா, தற்போது டத்தோஸ்ரீ முகமட் ஹசான் என நான்கு மந்திரி புசார்கள் காலத்தில் இது நீடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலக்குடியேற்றக்காரர்கள் 50 விழுக்காட்டினர் மலாய்க்காரர்களாக இருந்திருந்தால் அவர்களை இந்த மந்திரி புசார்களால் கைவிட்டு இருக்க முடி யுமா என்று செனவாங் ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர் பி. குணா கேள்வி எழுப்பினார். இந்த கெட்கோ விவகாரத்தை சட்டமன்றக்கூட்டத்தில் நாங்கள் பல முறை கேள்வி எழுப்பினோம். அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் பதில் அளிக்க முடியாது என்று சொன்ன மந்திரி புசார் முகமட் ஹசான் தற்போது எந்த தைரியத்தில் தன்மூப்பாக பேசியிருக்கிறார். அதிகாரம் திமிரா? என்று குணா வினவினார். அவர்களின் கோரிக்கை 8 ஏக்கர் நிலம்தானே. அவ்வளவு பெரிய நிலப்பரப்பளவை கொண்ட நிலத்தில் இருந்த காட்டை கழனியாக்கிய அந்த நிலக் குடி யேற்றக்காரர்களுக்கு 8 ஏக்கர் நிலத்தை வழங்குவதில் மந்திரி புசாருக்கு அப்படியென்ன சிக்கல், சிரமம் இருக்கப்போகிறது? எதற்காக ஒரு தனியார் நிலத் திற்கு அவ்வளவு வக்காளத்து வாங்க வேண்டும்? இதில் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏதும் நலன் சார்ந்த விவகாரம் உண்டா? என்று ரெப்பா ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் கேள்வி எழுப்பினார். இந்த கெட்கோ நிலம் ஏலத்திற்கு போகப்போகிறது என்பது மாநில அரசாங்கத்திற்கு தெரியாதா? உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த மக்களின் பிரச் சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாமே..? எதற்காக எதுவும் தெரியாததைப் போல் மாநில அரசாங்கம் இருந்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எது, எதற்கோ யாயாசான் நெகிரி அறவாரியத்தின் பயன்பாட்டை பயன்படுத்தும் மந்திரி புசார், கெட்கோ விவ காரத்தில் மட்டும் எதுவும் நடவாது போல் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன் என்று நீலாய் ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜ. அருண்குமார் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்திற்கு மாநில அரசாங்கம் தலையிட்டு கண்டிப்பாக தீர்வு காண வேண்டும். இல்லையேல் இதில் தனிநபர்கள் நலன் சார்ந்த அம்சங்கள் உள்ளன என்பதை கண்டு பிடிக்க நாங்கள் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு செல்ல வேண்டி வரும் என்று ரஹாங் ஜ.செ.க. சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசப்பின் நினைவுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img