img
img

காரின் மீது மோதிய டேனி ராஜ், திரி விக்ரம்
வெள்ளி 28 ஜூலை 2017 13:18:25

img

சிங்கப்பூர், சாங்கி விமான நிலையத்தில் வேலை செய்யும் இரு பாதுகாவலர்கள், தங்கள் இரவு நேரப் பணியை முடித்துவிட்டு கோஸ்வே வழியே வீடு திரும்பி கொண்டிருந்த போது பழுதாகி நின்று கொண்டிருந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகினர். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் டேனி ராஜ் முனியப்பன் (வயது 24), ஆர்.எல்.திரிவிக்ரம் (வயது 21) ஆகியோர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் செலேடார் நெடுஞ்சாலையின் வலது புறத்தில் பழுதாகி நின்று கொண் டிருந்த காரின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டேனி ராஜ் மோட்டார் சைக் கிளை ஓட்டியதாகவும் திரிவிக்ரம் பின்னால் அமர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் பரவலாகி வரும் காணொளியில், மோட்டார் சைக்கிள் காரின் பின்புறம் மோதி திரிவிக்ரம் சாலையில் தூக்கி எறியப்படும் காட்சியும் மோட்டார் ஓட் டியான டேனி ராஜ் காரின் பின் புறத்தில் மோதி சாலையில் விழும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. பலத்த காயங்களுக்கு ஆளான இருவரும் சிகிச்சைக்காக கூ தேக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று டேனி ராஜின் தந்தை முனியப்பன் (வயது 55) தெரிவித் தார். இந்த இரு நண்பர்களும் ஜொகூர் பாருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர் என அவர் குறிப்பிட்டார். எப்பொழுதும் இது போன்ற விபத்து காணொளிகளைப் பார்க்கும்போது எந்தவித உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், என் மகன் விபத்துக்குள் ளான அந்த காணொளியைப் பார்க்கும் போது என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மோட்டார் பந்தயங்களில் ஈடுபடும் பழக்கம் என் மகனுக்கு இல்லை. என் மகனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று முனியப்பன் வேதனையுடன் குறிப்பிட்டார். டேனி ராஜ்க்கு சிறு நீர்ப் பையில் காயம் ஏற்பட்டு ள்ளது. இடுப்பு, கை கால் பகுதி களில் எலும்பு முறிவு ஏற்பட்ட தோடு அதிக அளவில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சுய நினைவற்ற நிலையில் இருக்கிறார். திரிவிக்ரமிற்கு கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற் பட்டு பேச முடியாத நிலை யில் உள்ளார். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தங்களாலான உத வியை பாதிக்கப்பட்ட இருவருக் கும் அவர்களின் குடும்பத்திற்கும் நிச்சயமாக செய்வோம் என்று அவர்கள் பணிபுரியும் செர்டீஸ் சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் பாதுகாப்புப் பிரிவின் தலைவருமாகிய பேனி லிம் தெரிவித்தார். இந்த விபத்து குறித்த விசார ணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img