img
img

கெட்கோ விவகாரத்தில் செய்யப்பட்ட 700 புகார்களுக்கு போலீஸ் நடவடிக்கை என்ன ?
வெள்ளி 28 ஜூலை 2017 12:52:26

img

(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன் /எஸ். டவினா) கோலாலம்பூர், கெட்கோ தோட்ட விவகாரத்தில் செய்யப்பட்ட 700 புகார்களுக்கு போலீஸ் என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று தோட்ட நடவடிக்கை குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன் குப்பன் கேள்வி எழுப்பினார். 8 ஏக்கர் நிலம் கிடைக்கும் வரையில் கெட்கோ தோட்டத்தை காலி செய்யமாட்டோம் என்று நாங்கள் அனைவரும் போராடி வருகிறோம். மாநில மந்திரி புசார், மேம்பாட்டு நிறுவனத்தினர் என அனைவரும் எங்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். அப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் எங்களுக்கு சாதகமாக இல்லை.பேச்சுவார்த்தைகள் தோல்வி யில் முடிந்ததால் தோட்டத்தில் இருந்து எங்களை விரட்ட பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இறுதியில் இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.தோட்டத்தில் இருந்து சட்ட விரோதமாக மரங் களை வெட்டுவது, மக்களை மிரட்டுவது உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 700க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. ஆனால் இப்புகார்களுக்கு போலீஸ் என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை.போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை யில் தான் நாங்கள் அனைவரும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அவரும் எங்களை சந்திக்க விரும்புவது இல்லை. இனி இப்பிரச்சினை எங்கு கொண்டு செல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று கிருஷ்ணன் குப்புசாமி செய்தி யாளர்களிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img