புத்ராஜெயா, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். மக்கள் விரும்புவது அதுதான் என்றால் நான் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அவர் பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷனில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக அன்வாரை தான் ஆதரிப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்த சில நாட்களில் அவரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக் கிறது. பிரதமர் பதவிக்கு அன்வாரை தான் ஆதரிப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார் என பிரிட்டிஷ் நாளிதழான தி கார்டியன் செய்தி வெளியிட்டிருந்தது. தி கார்டியன் நாளிதழில் வெளியான செய்தியை மறுத்த டாக்டர் மகாதீர், அன்வார் அடுத்து பிரதமராக வர முடியாது என்றும் அவர் முதலில் சிறையில் இருந்து வெளியாக வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். அவர்களிடையே 1998இல் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அப்போது துணைப் பிரதமராக பதவி வகித்த அன்வாருக்கு எதிராக ஓரின உறவு குற்றச் சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அவர் பிரதமராக வருவதற்கு தகுதியற்றவர் என டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். அந்த அறிக்கையில் இப்போதும் தாங்கள் உறுதியாக இருக்கின்றீர்களா என வினவிய போது, அந்த நேரத்தில் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந் தேன். அது சூழ்நிலையைப் பொறுத்தது. அடுத்த ஆண்டு எனது மனதை நான் மாற்றிக் கொள்ளக்கூடும். நீங்கள் காத்திருங்கள் என்று டாக்டர் மகாதீர் பதி லளித்தார். பிரதமர் பதவிக்கு ஒரு வேட்பாளரை நியமிப்பதைப் பற்றி குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதி இது என்பதால் சரியான நேரத்தில் நாங்கள் பெயரை அறிவிப்போம் என்றார். இப்போது அல்லது தேர்தலுக்கு முன்னர் அல்லது நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் பெயர் அறிவிக்கப் படலாம் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்