கோலாலம்பூர்,
நாட்டில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதற்காக தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் உண்டா என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தாய்மொழிப் பள்ளிகளை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியாக துணிச்சல் பெற்றவர்கள் யாரும் உண்டா? என்றும் அவர் வினவினார். இது ஒரு யோசனைதான். ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வளர்ப்பதற்கு ஒன்றிணைந்து பள்ளி செல்ல நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால், அவ்வாறு நடப்பது என்பது கடினம்தான் என்றார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான ஜமாலுடின்.
எந்தவொரு தரப்பும் அவ்வாறு செய்யும் என்று நான் நினைக்கவில்லை என்று இங்கு டி.என்.50 கலந்துரையாடல் நிகழ்வில் பேசுகையில் ஜமாலுடின் மேற் கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு பெட்ரோனாஸ் ஊழியர்கள் ஏற்பாடு செய்ததாகும். சுமார் 250 பெட்ரோனாஸ் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ் வில் தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்கும் முயற்சி குறித்தும் முக்கிய விவாதமாக இருந்தது.