கோலாலம்பூர், செப். 14- துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் அவரின் நிர்வாகத் தில் முன்னாளில் துணைப் பிரதமர் பதவி வகித்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கைகுலுக்கிக் கொண்டது அவர்களின் சொந்த நலன் அடிப்படையிலான செயல் என்பதை நிரூபிக்கிறது என மசீச இளைஞர் பகுதித் தலைவர் செனட்டர் சோங் சின் வூன் கூறியுள்ளார். அவ்விருவரின் ஆதரவாளர்களுக்காக பரிதாப்படுகிறேன். இவ்வளவு காலம் அவ்விருவரையும் ஆதரித்து வந்த அவர்களுக்கு மேற்கண்ட கைகுலுக்கல் சம்பவம் ஒரு பெரிய அடியும் அவமானமுமாகும் என்றார் சோங். மலேசிய தேசி யப் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாட்டிலான மிட் ஆடம் (இலையுதிர் காலம்) பெஸ் டிவல் கொண் டாட்டத்தை அறிவிக்கும் வகையில் சோங் விஸ்மா மசீசவில் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் போது அவர் மேற்கண்ட விவரங்களைக் கூறியுள்ளார். டாக்டர் மகாதீர் - அன்வார் சந்திப்பு அரசியலில் நிரந்தர நண்பர்கள் அல்லது எதிரிகள் இல்லை என்பதைக் காட்டு கிறது. எனினும் அரசியல் வாதிகள் தங்களின் கொள்கை யில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சொந்த நலனுக்காக தங்க ளின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் தலை மைத்துவத்தை மக்கள் எப்படி நம்ப முடியும் என்றும் சோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்