(துர்க்கா) மந்தின், மாணவர்கள் என்ற போர்வையில் நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவரால் சமூக சீர்கேட்டுப் பிரச்சினைகள் இங்கு அதிகமாக நிலவுவது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெகிரி செம்பிலான், மந்தின் மாவட்டத்தில் இது போன்ற மாணவர்களால் இங்குள்ள பெண்கள் பல்வேறு பிரச் சினைகளை எதிர்நோக்கி வருவதாக இவ்வட்டார மக்கள் புகார் செய்துள்ளனர். குறிப்பாக, இங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த நைஜீரிய மாணவர்களால் பல தொல்லைகளை சந்திக்க வேண்டியுள்ளன என்று அவர்கள் தங் கள் புகாரை முன்வைத்தனர். போதைப்பொருள் கடத்தல், நம் பெண்களை தங்கள் வசம் கவருவது, போதையில் வாகனம் செலுத்தி, அதனால் பல குடும்பங்கள் இன்னல்களுக்கு ஆளாவது போன்ற செய்கைகளில் அந்த நைஜீரிய மாணவர்கள் ஈடுபட்டு வருவதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்திய குடும்பங்களை பரிதவிப்புக்கு ஆளாக்கும் இந்த நைஜீரிய மாணவர்களின் சீர்கேடான செயல்கள் அடியோடு துடைத்தொழிக்கப்படுவதற்கு போலீ சாரும் குடிநுழைவுத் துறை அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய குமார் த/பெ பழனியாண்டி (வயது 50), வெள் ளையன் த/பெ செங்கோட்டையன் (வயது 62), கிருஷ்ணன் த/பெ சுப்ரமணியம் (வயது 40), மகேன் த/பெ சித்ரவேல் (வயது 50), மனைவியைப் பறி கொடுத்த கணவர் குமரசாமி த/பெ ஐயப்பன் (வயது 46), தாயைப் பறிகொடுத்த பிள்ளைகள், மகனைப் பறி கொடுத்த தாய் வசந்தி த/பெ வீரசாமி (வயது 51) ஆகியோர் கேட்டுக் கொண்டனர். மந்தின் நகரை இவர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ளனர். கொள்ளை, வழிப்பறி, கைகலப்பு போன்ற சம்பவங்களுக்கும், வன் முறை ஈடுபாட்டிற்கும் அவர்கள் காரணமாக இருக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி பல முறை போலீசில் புகார் செய்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த வெளிநாட்டினர் மாணவர் விசாவில் இங்கு நுழைந்திருப்பதாக நம்பப்படுகிறது. நம் பெண்களை இவர்கள் தங்கள் வலையில் சிக்க வைத்து விடு கின்றனர். சமூகப் பிரச்சினைகளுக்கு இது காரணமாகின்றது. பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. தங்கள் கண் எதிரே இதுபோன்ற அவலங்கள் நிலவு வதைக் கண்டும் காணாமல் இருக் கும் சமுதாயத் தலைவர்களையும் அவர்கள் கடுமையாகச் சாடினர். மந்தின் நகரில் இவர்களின் ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த மாணவர்களுக்கு இந்நாட்டு சாலை விதிமுறைகள் பற்றி தெரிந்தி ருக்காத நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் வாகனம் செலுத்துவதால் நான் அறிந்த வரை 10 சாலை விபத் துகளில் பல குடும்பங்கள் தாய், தந்தை,மகன் என பலரை பலி கொடுத்திருப்பதாக வெள்ளையன் செங்கோட் டையன் (வயது 62) என்பவர் கூறினார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட மந்தின் நகரில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக செல்லும்போது நைஜீரிய மாணவன் ஒருவன் செலுத்திய காரினால் மோதப்படுவதிலிருந்து தாம் தப்பியதாக பாஜமில் வசிக்கும் கிருஷ்ணன் த/பெ சுப்ரமணியம் (வயது 40) தெரிவித்தார். பொது மக்களுக்கு மிரட்டலாக இருக்கும் இந்த நைஜீரிய மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பிற்கு சென்று குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த முற்படும்போது அதற்கு முன்பே தகவல் கிடைத்து அவர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விடுவதாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சாந்தி எனும் 4 பிள்ளைகளுக்குத் தாயான மாது ஒருவரை நைஜீரிய மாணவன் செலுத்திய வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர். இதே போன்று மற்றொரு சம்பவத்தில், கிருஷ்ணா த/பெ தர்மலிங்கம் (வயது 18) எனும் இளைஞன் விபத்தில் மரண மடைந்ததை அவர்கள் சுட்டிக் காட்டினர். அந்த வாகனத்தை செலுத்தியவரும் நைஜீரிய மாணவர்கள் என்று அவர்கள் கூறினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்தால் தவிர, இதற்கு தக்க தீர்வு காண இயலாது என்று அவர்கள் மேலும் தெரி வித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்