(ஆர்.குணா) பிரிக்பீல்ட்ஸ், மலேசிய மக்களிடையே அமைதியினை சீர்குலைக்கும் வகையில் இந்து மதத்தை பற்றி கருத்துரைக்கும் அல்லது எழுத்துப் படிவங்களை வெளியிடும் இந்து சமயத்தை சாராத நபர்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.நேற்று இங்குள்ள ஸ்காட் ரோடு கலா மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் 40ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் அனைவரும் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்க்கின்றனர் என்று மற்றொரு தீர்மானம் வலியுறுத்தியது.திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட சீர்திருத்தத்தை அரசாங்கம் உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும். காலையில் நடைபெற்ற ஆண் டுக் கூட்டத்தில் ஏறத்தாழ 500 அங்கத்தினர்கள் கலந்து கொண் டனர். ஆலயம் சமுதாயத்தின் மையமாக மாற வேண்டும் என்ற செடிக்கின் உன்னத நோக் கத்திற்கு மலேசிய இந்து சங்கம் உறு துணையாக இருக்கிறது.செடிக் சம்பந்தப்பட்ட நிர்வாகக் குழுக்கள் இரண்டில் மலே சிய இந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கண்காணிப்பாளராக இடம்பெற் றுள்ளார். ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 9 பேருக்கு சிறப்பு செய்யப்பட் டது. டான்ஸ்ரீ மணி ஜெகதீசன் போன்ற வர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அறுவருக்கு சங்க பூஷணம் விரு தும் இருவருக்கு சங்கரத்னா விருதும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. மலேசிய இந்து சங்கத்தின் தாப்பாவில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமத்தின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி பக்தர்கள் கேட்டுக் கொள் ளப்படுகின்றனர். ஆசிரமத்தின் நிலம் மொத்தம் 4200 சதுர அடி நிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடி நிலத்தை வெ.330 காணிக் கையாக செலுத்தி தங்களின் ஆதரவினை வழங்கலாம்.வட்டார பேரவையும் மாநில பேரவையும் தங்களின் நடவடிக்கையினை முடுக்கிவிட வேண்டும் என்று சங்கத் தலை வர் கேட்டுக் கொண்டார். 2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தங்களின் சங்கத்திற்கு எந்தவித நிதியும் கிடைக்கவில்லை என டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் வருத்தம் தெரி வித்தார். எந்தப் படகும் தண்ணீர் அதனை சுற்றி இருக்கும் போது மூழ்குவது இல்லை. ஆனால் தண்ணீர் படகின் உள்ளே வந்தால் மட்டுமே மூழ்கு கின்றது. அதை போன்று வெளியில் உள்ள வர்கள் எறியும் சேற்றால் மலேசிய இந்து சங்கம் மூழ்கி விடாது என்று இவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்