(பெருஜி பெருமாள்) கோலாலம்பூர், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் அல்லது நம்பிக்கை கூட்டணியின் முக்கியமான மேல்மட்ட பதவிகளுக்கு இந்தியர்களுக்கு வாய்ப் பளிக்கப்படவில்லை என்ற விஷயத்தை தன் கவனத்திற்கு கொண்டு வந்த மலேசிய நண்பனுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அதன் அவைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். மேல் மட்ட நிலையில் இந்தியர்களுக்கு வாய்ப் பளிக்கப்படவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். இது பற்றி நான் வருந்துகிறேன். கூட்டணியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை ஆராய்வேன் என்று மகாதீர் மேலும் கூறினார்.உயரிய பதவிகளுக்கான வாய்ப்பில் இந்தியர் பிரதிநிதித்துவம் வெறுமையாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே என்பதை அவர் ஒப்புக்கொண்டார். நேற்றிரவு, பந்தாய் டாலாம் பி.கே.ஆர் ஏற்பாடு செய்திருந்த ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பின்போது மலேசிய நண்பன் எழுப்பிய கேள்விக்கு துன் மகாதீர் மேற்கண்ட பதிலை கூறினார். பக்காத்தான் ஹராப்பான் அண்மையில் அதன் பொறுப்பாளர்களை அறிவித்திருந்தது. அதில் துணைத் தலைவர் பொறுப்பில் மூவரையும், உதவித் தலை வர்களாக நால்வரையும் நியமனம் செய்தது. எனினும், எதிர்க்கட்சிகளில் முக்கியமான பதவிகள் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளுக்கு அப்பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாதது ஏன் என்று மலேசிய நண்பன் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்