பெட்டாலிங்ஜெயா, ஊழல் இல்லாத உறுதிமொழியில் (ஐபிஆர்) கையெழுத்திட பினாங்கு மாநில அரசாங்கம் மறுத்து இருப்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஏமாற்றமடைந்து இருக்கிறது. நாட்டின் முதல்நிலை எதிரியான ஊழலை எதிர்த்து போராட்டத்தில் மாநில அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இது காட்டும். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான சம்பவங்களை தான் கடுமையாக கருதுவதாக பொதுமக்களுக்கு எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசாங் கம் உண்மையில் காட்ட வேண்டும் என்று தலைமை ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அகமட் கூறினார். ஊழலை அனுமதிக்க மாட்டோம் என பொது மக்கள் கூற வேண்டும் என்றும் எம்ஏசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வெறுமனே கூறு வதை நாங்கள் விரும்பவில்லை. ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்த்துப் போராடுவதில் அவர்களும் தங்களுடைய பங்கை ஆற்றுவது டன் கடப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதர மாநிலங்கள் ஐபிஆரில் கையொப்பமிட முடியும்போது பினாங்கு அரசாங்கத்தின் செயல் எனக்கு விசித்திரமாக இருக்கிறது. கிளந்தான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களும் ஐபிஆரை அமல்படுத்த தாங்கள் தயார் என கூறியுள்ளன. ஒரேயொரு மாநிலம் மட்டுமே ஐபிஆரில் கையெழுத்திட மறுத்து இருக் கிறது. இந்த விவகாரத்தை மதிப்பிட வேண்டியது மக்களை பொறுத்தது என்று அவர் செய்தி யாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்