(பி.எம்.குணா) காப்பார், நாட்டின் பொருளாதாரத்தை செல்லரிக்கக்கூடிய ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு, அவர்களின் நடவடிக்கையை வேரறுப்பதில் பொது மக்கள் உத விட வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸூல்கிப்ளி அகமட் வலியுறுத்தினார். நேற்று காப்பார் வட்டார இந்தியர் களுடன் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் அவர் இதனை வலியுறுத்தினார். இந்நிகழ்வில் முதியோர்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. மக்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை மக்க ளிடமே கொண்டு சேர்க்காத மக்கள் பிரதிநிதிகளுக் கெதிராக மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் இந்தி யர்கள் தயக்கமோ அச்சமோ இன்றி புகார் செய்ய வேண்டும் என்று அதன் ஆணையர் டத்தோ ஸுல்கிப்ளி அகமட் அறிவுறுத்தினார். வேண்டாம் லஞ்சம், வேண் டாம் லஞ்சம், வேண்டாம் லஞ்சம் என்று இந்தியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இனி, யாராவது லஞ்சம் கேட்டால் அல்லது கொடுத்தால் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத் தின் தலைவர் டத்தோ ஸுல்கிப்ளி அகமட்டிடம் புகார் செய்வோம் என்று துணிந்து அவர்களிடம் கூறுங்கள் என்று அவர் நினைவுறுத்தினார். அரசாங்க மானியங்களில் முறைகேடுகள் நடப்பதை இந்தியர்கள் இனி வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதி உதவிகளை தடுக்கவோ, பறித்துக்கொள்ளவோ முயற்சிக் கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து எங்களிடம் அச்சமின்றி புகார் செய்யுங்கள். அந்த பிரதிநிதிகள் அரசாங்க மானியங்களில் கைவைப்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இனியும் விட்டு வைக்காது என்று அவர் கூறினார். வர லாற்றில் முதல் தடவையாக காப்பார் வட்டார இந்தியர்களுடன் இந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை ஆணையம் நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்தியர்களுக்கு என நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நடத்துவது இதுவே முதல் தடவையாகும். நேற்று நடைபெற்ற காப்பார் வாழ் இந்தியர்களுடனான நோன்பு திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச் சியில் 400 மாணவர்களுக்கும், 350 முதியோர்களுக்கும், நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது. மேலும், 700 பேருக்கு மளிகைப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்